
கற்றுக்கொள் துன்பம் போல் பாடம் இல்லை
உன் நெஞ்சின் சோகம் எல்லாம் கேட்டுக்கொள்ள
உனக்கிங்கே உன்னைத் தவிர யாரும் இல்லை
பணமொன்றே எப்போதும் வாழ்க்கை இல்லை
புரிந்தாலே இதயத்தில் துயரமில்லை.
கண்ணீரைப் போல் வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போல் பாடம் இல்லை
ஓர் அலை மீது போகும் இலை போல தானே
உலகில் மனிதன் வாழ்க்கை: போகும் வரை போவோம் நாமே
அதில் அகங்காரம் என்ன? அதிகாரம் என்ன?
அன்பின் வழியில் சென்றால்: கரை சென்று சேர்வோம் நாமே.
கவலை இன்றி உலகத்திலே, மனிதன் யாரும் கிடையாது
தவளைத் தாண்டி போவதனால் தாமரைப் பூக்கள் உடையாது
உன் வாழ்க்கை என்னும் கத்தியினைக் காயத்தோடு தொட்டுப்பார்
காலமோடு காயமெல்லாம் மாயமாக மறையும் பார்
கண்ணீரைப் போல் வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போல் பாடம் இல்லை
தாய் கருவோடு வாழ்ந்த அந்நாளில் தானே
கவலை ஏதும் இன்றி கடவுள் போல் வாழ்ந்தோம் நாமே
பின் காசோடு கொஞ்சம் கனவோடு கொஞ்சம்
நம்மை நாமே இன்று தேடி தான் தொலைகின்றோமே
வழியில் நீயும் வளையாமல் மலையில் ஏற முடியாதே
வலிகள் ஏதும் இல்லாமல் வாழ்க்கை இங்கே கிடையாதே
வாசல் தாண்டி போகாமல் வானம் கண்ணில் தெரியாதே
காசும் பணமும் எப்போதும் கானல் நீராய் மறைந்திடுமே
கண்ணீரைப் போல் வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போல் பாடம் இல்லை
உன் நெஞ்சின் சோகம் எல்லாம் கேட்டுக்கொள்ள
உனக்கிங்கே உன்னைத் தவிர யாரும் இல்லை
பணமொன்றே எப்போதும் வாழ்க்கை இல்லை
புரிந்தாலே இதயத்தில் துயரமில்லை.
ஏன் இவ்வளவு சோகம்???
ReplyDeletenice song
ReplyDeleteSogam sugamagum anbanavargalai NINAIVIL kondal....
ReplyDeleteIthuvum kadanthu pogum..............
ReplyDelete